கண்ணீர்ப் அபிஷேகம்
ai-watermarkகண்ணீர்ப் அபிஷேகம்

கண்ணீர்ப் அபிஷேகம்

Lovers' duet folk 197os Tamil film songs Composer M S Viswanathan style

Membercashniche

2026-04-29 12:18:28

V3.0

Woman: வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு

கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு

காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே

பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.

Man: வானம் அங்கே அழுததுமே

பூமியில் இங்கே சந்தோஷம்

வானம் அழுத கண்ணீரால்

பூமிக்கு இங்கே அபிஷேகம்

ஒத்தரோட அழுகையால

இன்னொருத்தர் சந்தோஷம்

ரெண்டு பேர் சேர்ந்து சிரிச்சா

இயற்கைக்கே சந்தேகம்

வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு

கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு

காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே

பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.

Woman: சூரியனும் பூமியும்

ஒண்ணாத்தான் சிரிக்கறாங்க

அவங்களைப் பிரிக்க

யார்தான் இங்கே இருக்காங்க?

நல்லவங்க எப்பவுமே

சேர்ந்துதானே சிரிப்பாங்க?

ஒத்தருக்குத் துன்பம் வந்தா

ஒண்ணா சேர்ந்து தடுப்பாங்க

வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு

கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு

காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே

பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.

Man: வானத்துக்கும் பூமிக்கும்

பாலம் போடும் மழைத்தண்ணி

பாதி தூரம் நடக்கும்போதே

பாலம் அறுந்து தொங்கிடும்.

Woman: நிரந்தரமாய்ப் பாலம் போடும்

சூரியனின் ஒளித்தடம்

பனித்துளியும் அதல நடந்து

புருஷன் வீடு போயிடும்.

Both: வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு

கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு

காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே

பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.